Archives: மார்ச் 2022

odb

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கீழ்ப்படிதல் ஒரு தெரிந்தெடுப்பு

நெதர்லாந்தில் குளிர்காலம் அரிதாகவே நிறையப் பனியைக் கொண்டுவருகிறது, ஆனால் கால்வாய்கள் உறைந்து போகும் அளவுக்குக் குளிர்ச்சியாக இருக்கும். என் கணவர், டாம், அங்கு வளர்ந்து கொண்டிருந்தபோது, ​​அவரது பெற்றோருக்கு ஒரு குடும்ப சட்டம் இருந்தது: "குதிரையின் எடையைத் தாங்கும் அளவில் பனிக்கட்டி இல்லையென்றால், அதை விட்டு விலகி இருங்கள்". குதிரைகள் தங்கள் இருப்புக்கான தடயங்களை விட்டுச் செல்லும் என்பதால், டாம் மற்றும் அவரது நண்பர்கள் சாலையிலிருந்து கொஞ்சம் குதிரையின் சானத்தை எடுத்து அதை மெல்லிய பனிக்கட்டி மீது எறிந்து, குடும்பச் சட்டத்தை மீறி மேற்பரப்பில் மேலே ஏறிச் சென்றனர். அவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை, அவர்கள் செயலை யாரும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் அவர்கள் கீழ்ப்படியவில்லை என்பதை அவர்கள் தங்கள் இதயங்களில் அறிந்திருந்தனர்.

கீழ்ப்படிதல் எப்போதும் இயல்பாக வருவதில்லை. கீழ்ப்படிவதா அல்லது வேண்டாமா என்ற விருப்பம், கடமை உணர்வு அல்லது தண்டனை பற்றிய பயத்திலிருந்தும் உருவாகலாம். ஆனால் நம்மீது அதிகாரம் உள்ளவர்களிடம் அன்பும் மரியாதையும் இருப்பதாலும் கீழ்ப்படிவதைத் தெரிவு செய்யலாம்.

யோவான் 14 இல், இயேசு தம் சீடர்களுக்கு அறைகூவல் விடுத்தார், "ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்,. . . . என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான்” (வ. 23-24). கீழ்ப்படிவது எப்போதுமே எளிதான விருப்பம் அல்ல. ஆனால் நமக்குள் வாழும் ஆவியானவரின் வல்லமை, அவருக்குக் கீழ்ப்படிவதற்கான விருப்பத்தையும் திராணியையும் அளிக்கிறது (வ. 15-17). அவருடைய உதவியால், நம்மை மிகவும் நேசிப்பவரின் கட்டளைகளை நாம் தொடர்ந்து பின்பற்றலாம். இது தண்டனை பயத்தால் அல்ல, மாறாக அன்பினால்.

ஆவிக்குரிய ஏற்ற தகுதி

நிர்மல், உடற்பயிற்சி கூடத்தில் தவறாமல் பயிற்சி செய்வான். அது அவன் உடலில் வெளிப்படையாகத் தெரியும். அவனுடைய அகன்ற தோள்கள், புடைத்த தசைகள், மேலும் அவனது மேற்கைச் சுற்றளவு என் தொடைகளின் அளவாக இருக்கும். அவனது இந்த கட்டழகே, அவனோடு தேவனைக் குறித்துப் பேச, என்னைத் தூண்டியது. உடல் தகுதிக்கான அவனது அதே அர்ப்பணிப்பு, தேவனுடனான ஆரோக்கியமான உறவிலும் வெளிப்படுகிறதா என்று நான் அவனிடம் கேட்டேன். நாங்கள் மிகவும் ஆழமாகப் பேசவில்லை என்றாலும், நிர்மல் "தன் வாழ்க்கையில் தேவன் இருப்பதை" ஒப்புக்கொண்டார். நானூறு பவுண்டு எடையுள்ள, பொருத்தமற்ற, ஆரோக்கியமற்ற உருவத்திலிருந்த அவனது பழைய புகைப்படத்தை என்னிடம் காண்பிக்கும் அளவுக்கு நாங்கள் நீண்ட நேரம் பேசினோம். அவனது வாழ்க்கைமுறையில் ஏற்பட்ட மாற்றம், உடல் ரீதியாக ஆச்சரியமானவற்றைச் செய்திருந்தது.

1 தீமோத்தேயு 4:6-10 இல், உடல் மற்றும் ஆவிக்குரிய பயிற்சி மீது நம் கவனத்தை திரும்புகிறது. “தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு. சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது" (வ. 7-8). ஒருவருடைய வெளிப்புறத் தகுதி, தேவனுடனான நமது நிலையை மாற்றாது. நமது ஆவிக்குரிய தகுதி, உள்ளம் சம்பந்தப்பட்ட விஷயம். இது இயேசுவை நம்புவதற்கான தீர்மானத்தோடு தொடங்குகிறது, அவர் மூலமே நாம் மன்னிப்பைப் பெறுகிறோம். அந்த புள்ளியிலிருந்தே, தேவபக்தியான வாழ்க்கைக்கான பயிற்சி தொடங்குகிறது. இதில், “விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும்..  நற்போதகத்திலும்” (வ. 6) தேறி வருதல் மற்றும் தேவனுடைய பெலத்தால், நம் பரலோகத் தகப்பனைக் கனம் பண்ணுகிற வாழ்க்கையை வாழ்தல் ஆகியன அடங்கும்.

உதவியை வழங்குதல்

வீடு தேடி உணவு வழங்கும் தனது வேலையினிமித்தம் சுவாதி, சுதாகரின் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, ​​உணவுப் பையிலிருந்த முடிச்சை அவிழ்க்க அவருக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். சுதாகர் சில ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார், ஆகவே முடிச்சை அவிழ்க்கும் திறன் அவரிடம்  இல்லை. சுவாதி மகிழ்ச்சியுடன் கடமையைச் செய்தாள். சுவாதி அந்த நாள் முழுவதும் சுதாகரை பற்றி அடிக்கடி நினைவு கொண்டாள், மேலும் அவருக்குத் தேவையான சில அத்தியாவசியங்களைச் சேகரிக்க அவள் தூண்டப்பட்டாள். ஊக்கமளிக்கும் குறிப்புடன் சுவாதி, தனது வீட்டு வாசலில் விட்டுச் சென்ற சூடான தேநீரையும்…